மம்தா-ஸ்டாலின் பேசியது என்ன?

அரசியல்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (நவம்பர் 2) மாலை சந்தித்துப் பேசினார்.

மேற்குவங்க ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் பதவி வகித்து வருகிறார். இல.கணேசனின் அண்ணன் கோபாலன் பிறந்த நாள் விழா நாளை (நவம்பர் 3) கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் மம்தா.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த மம்தா பானர்ஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.

mamata banerjee and stalin meet

கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தங்கை கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் மம்தா வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், எம்.பி. டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும் என மம்தா அழைப்பு விடுத்தார். நானும் வருவதாக சொல்லியுள்ளேன்” என்றார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஸ்டாலின் எனது சகோதரரை போன்றவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள நான், ஸ்டாலினை சந்திக்காமல் எப்படிச் செல்ல முடியும்.

இரண்டு கட்சி தலைவர்கள், அரசியலை தாண்டி வேறு விஷயங்கள் குறித்து பேசலாம். வளர்ச்சி குறித்தும் பேசலாம். அரசியலைவிட வளர்ச்சி முக்கியம் அல்லவா?” எனத் தெரிவித்தார்.

ஜெ.பிரகாஷ்

அதிகாரிகள் பாஜகவுக்கு பயப்படுகிறார்களா? நேரு பேச்சின் பின்னணி இதுதான்!

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மம்தா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0