காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் கார்கே

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இன்று (அக்டோபர் 26) பதவி ஏற்றார் மல்லிகார்ஜுன கார்கே.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கடந்த 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று முறைப்படி மல்லிகார்ஜுன கார்கே தலைவர் பதவி ஏற்பார் என்று கட்சித் தலைமை அறிவித்தது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றார்.

இன்று காலை 10.30 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியதும் வந்தே மாதரம் ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கார்கேவுக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை முறைப்படி ஒப்படைக்க, தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் கார்கே.

முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிரியா

ஈஸ்டர் குண்டு வெடிப்பும்…கோவை கார் வெடிப்பும்…முபினின் பகீர் பின்னணி!

உக்ரைனை ஆதரிக்க வேண்டிய தருணம் இது: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *