தற்காலிக பின்னடைவு… காங்கிரஸ் மீண்டு வரும் – கார்கே நம்பிக்கை!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

தற்காலிக பின்னடைவுகளிலிருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தெலங்கானா தவிர மற்ற மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தெலங்கானா மக்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மாநிலங்களிலும் நாங்கள் மீண்டு வருவோம். நான்கு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களை நான் பாராட்டுகிறேன். தற்காலிக பின்னடைவுகளை சமாளித்து, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா கூட்டணியை முழுமையாக தயார்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தெலங்கானா காங்கிரஸ் வெற்றி: சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் அதி கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *