நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்று ஏற்கனவே எனக்கு தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஜனவரி 28) தெரிவித்துள்ளார்.
பிகார் மாநில முதல்வர் பதவியை நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும், பிகார் அரசை கலைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார்.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவோடு, இன்று மாலை நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகியிருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “முன்னதாக நிதிஷ்குமார் எங்களுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக போராடினார்.
ஆனால், தற்போது அவர் என்டிஏ கூட்டணியில் சேரப்போவதாக லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி இருவரும் என்னிடம் கூறினார்கள். உண்மையில் அது இன்று நடந்துள்ளது. இந்தியா கூட்டணியை விட்டு நிதிஷ் வெளியேறுவார் என்று ஏற்கனவே எனக்கு தெரியும்” என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…