காங்கிரஸில் அனைவரும் சமமானவர்கள் : கார்கே

அரசியல்

காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, கட்சியில் சிறியவர் பெரியவர் என யாருமில்லை என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிட்ட நிலையில், 7 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார்.

இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 26 ஆம் தேதி அவர் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தேர்வாகியுள்ள கார்கே இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியில் அனைத்து தொண்டர்களும் சமமானவர்கள். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை அச்சுறுத்தும் பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதைக் காங்கிரஸ் நாட்டிற்குக் காட்டியுள்ளது. நாம் அனைவரும் காங்கிரசை வலுப்படுத்த உழைக்க வேண்டும்.

ஜனநாயகத்தையும் நாட்டு மக்களையும் தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.

சர்வாதிகாரத்துக்கு நாட்டை தியாகம் செய்ய முடியாது” என்றார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகக் கூறிய மல்லிகார்ஜுன கார்கே,

“வேலை இல்லா திண்டாட்டம் , விலைவாசி உயர்வு, சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் உருவாக்குபவர்களுக்கு எதிராக ராகுல்காந்தி மேற்கொண்டிருக்கும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் நாட்டு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்த சோனியா காந்தியின் தலைமைத்துவத்தைப் பாராட்டிப் பேசிய கார்கே, “அவரது பதவிக் காலம் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும்.

23வருடங்களாகக் கட்சிக்காகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்த சோனியா காந்திக்கு எனது நன்றி” எனவும் கூறினார்.

பிரியா

இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை : ஜெ.மரண பழி – சசிகலாவின் நிஜ ரியாக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.