மீண்டும் அதிமுகவில் மைத்ரேயன்

Published On:

| By Kavi

முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் தன்னை இன்று (செப்டம்பர் 12)அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

1991-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தார்.

அதன்பிறகு 1999-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார் மைத்ரேயன்,

அதிமுகவில் 2002- 2004, 2007-13, 2013-19 ஆகிய காலகட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளிலும் மாறி மாறி இருந்து வந்தார்.

இந்தநிலையில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி மைத்ரேயனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனை தொடர்ந்து 2023 ஜூன் 9 டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்.

இந்தசூழலில் இன்று காலை , சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் மைத்ரேயன்.

தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

இதை பரிசீலனை செய்த எடப்பாடி பழனிசாமி மைத்ரேயனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார் என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

கொங்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி- ஈரோட்டில் இருந்து கோரிக்கை!

சீதாராம் யெச்சூரி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

சிம்புவுக்கு நன்றி சொன்ன பவன் கல்யாண்! பின்னணியில் தாராள குணம்