தேநீர் போட்டு மோடியை கலாய்த்த மஹுவா மொய்த்ரா

அரசியல்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா நேற்று (ஜனவரி 11) தனது தொகுதியில் உள்ள ஒரு கடையில் தேநீர் தயாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டின் துவக்கத்தில் அக்கட்சி ‘திதிர் சுரக்ஷா கவாச்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

திரிணாமுல் தலைவர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற தொகுதியான கிருஷ்ணாநகரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாலையோர கடையில் தேநீர் தயாரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், கொதிக்கும் தேநீர் பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கிறார்.தேநீர் தயாரானதுடன் கடை காரரிடம் தேநீர் பாத்திரத்தை கொடுக்கிறார். மஹுவா மொய்த்ரா தேநீர் போடுவதை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

அவர் தனது பதிவில், “தேநீர் தயாரிக்க முயற்சி செய்தேன். இது என்னை எங்கு அழைத்துச் செல்லும் என்று யாருக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு பிரதமர் நரேந்திர மோடியை அவர் மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்து வருகிறது.

mahua moitra makes chai in new video

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தாம் சிறு வயதாக இருக்கும்போது ரயில் நிலையத்தில் தேநீர் கடையில் வேலை செய்ததாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதனை குறிப்பிட்டு தான் மஹுவா மொய்த்ரா ட்வீட் செய்துள்ளதாக அவரை பாஜக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

செல்வம்

கோல்டன் குளோப் விருது வென்ற கீரவாணி தமிழில் இத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளாரா?

சேது சமுத்திர திட்டம் – முதல்வர் தனித்தீர்மானம்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *