மக்களவையில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தில் நேற்று பங்கேற்ற திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, மத்திய அரசின் பட்ஜெட்டை நார் நாறாகக் கிழித்து தொங்கவிட்டார். mahua moitra budget
அவர், “எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி உரையாற்ற ஆரம்பித்தால் பிரதமர் அவையை விட்டு வெளியே செல்கிறார். பட்ஜெட்டை குறித்து விவாதிக்கத் தொங்கினால் நிதி அமைச்சர் வெளியே செல்கிறார்.
இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிகவும் மோசமான பட்ஜெட். சென்ற அரசாங்கத்தை விட மக்கள் வேறு ஒரு நல்ல அரசாங்கத்தை இந்த தடவை எதிர்பார்த்தார்கள்.
ஆனால் இந்த முறையும் அதே கேபினட் அமைச்சர்கள், அதே நிதி அமைச்சர் மற்றும் அதே மோசமான பட்ஜெட்தான் அவர்களுக்குக் கிடைத்தது.” என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் “இந்த அரசாங்கம் தனது ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த பட்ஜெட்டை போட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைத் திட்டமிட்டு நெறிக்கிறது இந்த பட்ஜெட்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த வரி வருவாயில் நேர்முக வரி தோராயமாக 60 சதவீதமும், மறைமுக வரி 40 சதவீதமாக இருக்கும்.
டென்மார்க், நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளைப் பொறுத்தவரை, நேர்முக வரி 70 சதவீதமும், மறைமுக வரி 30 சதவீதம் இருக்கும்.
ஆனால் நம் நாட்டில் தான் , மொத்த வரி வருவாயில் நேர்முக வரி 65%, மறைமுக வரிய, 35 சதவீதம் பங்கு வகிக்கிறது.
இது நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தைத்தான் பெரும்பான்மையாகப் பாதிக்கும். ஏன் என்றால், மறைமுக வரி அனைவருக்கும் ஒன்றுதான். பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, அனைவரும் ஒரே சதவீதம் மறைமுக வரியைத்தான் கட்டுகிறார்கள்.
ஒரு நாடு முன்னேர வேண்டுமானால் மறைமுக வரிக்கும் நேர்முக வரிக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அது இல்லை.
விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, சமூக நலத்திட்டத்திற்கான ஒதுக்கீடு கடந்த பத்தாண்டுகளில் 25 % வீழ்ந்துள்ளது.
நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் 8 கோடி புலம் பெயர் தொழிலாளிகளுக்கு நியாயவிலைக்கடைளின் மூலம் அரிசி பருப்புகளை வழங்கச் சொல்லித் தீர்ப்பு அளித்திருந்து. ஆனால் இன்று வரை அதை ஒன்றிய அரசாங்கம் அமல்படுத்தவில்லை.
இந்த பட்ஜெட்டில் பீகாருக்குச் சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கட்டப்படும் சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து தான் பணம் வசூலிக்கப் படும்.
ஆந்திராவிற்கு நிதி வழங்கப் படவில்லை. மாறாகக் கடன் தான் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த கடனை அந்த மாநிலத்தின் மக்கள் தான் மறைமுகமாக அடைக்க நேரிடும்.
நாட்டின் எல்லையைப் பாதுகாக்க போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. இந்த பட்ஜெட்டில் வெறும் 1.97% சதவீதம் தான் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி மோசமான பட்ஜெட்டால் இனி வரும் நாட்கள் இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் காட்டிக்கொடுக்கும்” என்று ஆவேசமாக பேசி முடித்தார் மொய்த்ரா.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இந்தியா தோல்வி… 27 ஆண்டுக்கு பிறகு மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை!
”தகுதியிழப்பால் உங்கள் சாதனையை குறைக்க முடியாது”: வினேஷ்க்கு ஸ்டாலின், உதயநிதி ஆறுதல்!
செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என்றால்… : நீதிமன்றம் எச்சரிக்கை!
‘ கே. ஜீ. எஃப் ‘ யஷ் – நயன்தாரா நடிக்கும் ‘ டாக்ஸிக் ‘ ; நாளை முதல் படப்பிடிப்பு !