இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இதில் 75 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், நேற்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பாக அனுர குமார திசநாயக்க, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே, தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல், அனுர குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி 24,59,993 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கடும் பின்னடவை சந்தித்துள்ளார். மதியம் 12 மணி நிலவரப்படி, 1,42,589 (2.29%) வாக்குகளை மட்டுமே பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தனது அரசியல் வாரிசான நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்திருப்பது, மகிந்த ராஜபக்சேவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தோல்வி காரணமாக நமல் ராஜபக்சேவின் குடும்பத்தினர் இலங்கையை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுற்றுச்சூழல் நெருக்கடி Vs பருவநிலை மாற்றம்… சவால்களும் தீர்வுகளும்
இலங்கை அதிபர் தேர்தல்… அனுரா குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை!