மகாராஷ்டிரா: ஏக்நாத் அணிக்கு தாவிய உத்தவ் ஆதரவு எம்.பி.!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியுள்ளார்.

மகாராஷ்டிராவில், சிவசேனா கட்சி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு பிரிவும் என இரண்டு பிரிவுகளாக அக்கட்சி உடைந்து நிற்கிறது.

சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன், பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்தார்.

இதேபோல சிவசேனாவில் உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேரும் ஷிண்டே அணிக்கு சென்றனர்.

இந்தநிலையில் மும்பை வடமேற்கு தொகுதி எம்.பி. கஜனன் கீர்த்திகரும் ஷிண்டே அணியில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கஜனன் கீர்த்திகரை அவரது வீட்டில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போய்ப் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது முதல் அவர் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர், கடந்த நவம்பர் 10ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக ஷிண்டே அணியில் இணைந்தார்.

ஷிண்டே அணியில் கஜனன் இணைந்ததை அடுத்து உத்தவ் தாக்கரே அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். கஜனன் ஏக்நாத் அணிக்குச் சென்றது உத்தவ் தாக்கரே அணிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில் கஜனன் கீர்த்திகரின் மகனும், யுவசேனா பிரமுகருமான அமோல், உத்தவ் தாக்கரே அணியில் அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

தீர்ந்தது நிலக்கரி… மூடப்படும் என்.எல்.சி.: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts