மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி உடன்பாடு இன்று (ஏப்ரல் 9) இறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் மே 20 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், சிவசேனா ( உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் ( சரத் பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டணி கட்சிகளின் தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் – 17, சிவசேனா ( உத்தவ் தாக்கரே பிரிவு) – 21, தேசியவாத காங்கிரஸ் ( சரத் பவார் பிரிவு) – 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
ஒர்க் பிரஷ்ஷர்…ஆடிட்டரை நடுரோட்டில் தாக்கிய ஊழியர்கள்…பெங்களூரை அதிரவைத்த சம்பவம்
அரசு ஊழியர்களின் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: எடப்பாடி தாக்கு!