|

மகாராஷ்டிரா தேர்தல் முன்னிலை நிலவரம்… 100 இடங்களைத் தாண்டிய என்டிஏ கூட்டணி!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக – 70, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 34, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 27 என மொத்தம்  134 இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 14, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 8 இடங்கள் என மொத்தம் 31 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆட்சியமைக்க 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜார்க்கண்ட் எலக்‌ஷன் ரிசல்ட்… இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி.. என்டிஏ முன்னிலை!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்… பாஜக கூட்டணி முன்னிலை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts