மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இன்று (நவம்பர் 26) ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. இந்த கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 132 இடங்களில் வெற்றிபெற்றது.
இதனால் அடுத்த முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், ஷிண்டே மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து நாம் நேற்று அடுத்த முதல்வர் பட்நாவிஸ்… மத்திய அமைச்சராகிறார் ஷிண்டே? என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழ்நாடு போலீஸை சிறைபிடித்த புதுச்சேரி சாராயக்கடை ஊழியர்கள்! – நடந்தது என்ன?
ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்தது… இந்த சான்ஸ மிஸ் பண்ணாதீங்க மக்களே!
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அப்பல்லோவில் அட்மிட்… என்னாச்சு?