மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.
இதில் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணி தரப்பில் ஒன்பது பேரும் பாஜக தரப்பில் ஒன்பது பேரும், அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 14) அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு பொது நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சித்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் மக்கள் தொடர்புகள், பொதுப்பணிகள் (பொது திட்டங்கள்), போக்குவரத்து, சுற்றுச்சூழல் துறை உட்பட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் பட்னவிசுக்கு உள்துறை மற்றும் நிதித்துறை சட்டம் மற்றும் நீதி, வீட்டுவசதி மற்றும் எரிசக்தி துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறையின் கீழ்தான் போலீஸ் உள்ளிட்ட அதிகாரங்கள் வருகின்றன.
அரசியல் சாசனப்படி துணை முதல்வர் என்ற பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், மகாராஷ்டிராவில் துணை முதல்வரான பாஜக பட்னவிஸிடம்தான் உள்துறை இருக்கிறது.
இதன் மூலம் முதல்வரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் துணை முதல்வரான ஷிண்டேவிடம் இருப்பதாக பாஜகவினர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
–க.சீனிவாசன்
இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!