மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மஹாயுதி கூட்டணி என்ற பெயரில் களமிறங்கின.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து மஹா விகாஸ் அகாதி என்ற பெயரில் போட்டியிட்டன.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மஹாயுதி கூட்டணியில், பாஜக – 19, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் – 8, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) – 4 என 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மஹா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் – 6 சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் – 3, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா – 5 என 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொலைகார பாவிகளா? – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்!