அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 1.065 கோடி மக்கள் பயனடைய உள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
மகளிர் உரிமை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 12 ஆயிரம் கோடி ரூபாய். மற்ற மாநிலங்கள் வாய் பிளந்து பார்ப்பதோடு, இதையே இனி தேர்தல் வாக்குறுதியாக ஆக்க முனைப்புடன் யோசிக்கின்றன. ஏற்கெனவே குடும்பத்தில் கல்லூரியில் படிக்கும் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் சென்று கதவைத் தட்டுகிறது. இப்படி தாயும், மகளும் பெறும் மகிழ்ச்சியைத் தருவது ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியல்லவா?
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலைநோக்கு பார்வையுடன் ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கிய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் அனைத்து மகளிருக்கும் எல்லா உரிமைகளும் உரிமைத்தொகையும் கிடைத்தால் மகிழ்ச்சியே
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
மின்சார கட்டணம், சொத்துவரி, பால் விலை போன்ற சுமையை மக்கள் முதுகில் ஏற்றிவிட்டு யானை பசிக்கு சோளப்பொறி கொடுக்கிறார்கள். முதலில் 2 கோடி குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகை கொடுப்போம் என்றார்கள். இப்போது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த 1.50 கோடி பேரில் 56 லட்சம் பேருக்கு உரிமை தொகை கொடுக்கவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் 2.5 கோடி குடும்பத்தலைவிகள் உள்ள நிலையில் ஒரு கோடி நபர்களுக்கு மட்டுமே உரிமை தொகை வழங்குகின்றனர். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடம் வாக்குகளை பெற்றுள்ளது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மகளிர் உரிமை தொகை வழங்குவது தேர்தலை முன்வைத்து செய்யும் அரசியல். திமுக ஆட்சியில் சொத்துவரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, போன்ற பல பிரச்சனைகளை மக்கள் அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
ஆயிரம் ரூபாயை வைத்து மகளிர் என்ன வளர்ச்சியை பெற முடியும்? மின் கட்டணம், அரிசி, பருப்பு, விலை உயர்ந்துள்ளது. தமிழகம் 9 இலட்சம் கோடி கடனில் உள்ளது.
செல்வம்
விஏஓ கொலை : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!
“தமிழகத்தின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகிறார்கள்” – ஸ்டாலின்
Comments are closed.