“தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 திமுக பிச்சை போடுகிறார்கள்” என குஷ்பு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இன்று (மார்ச் 12) விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை நெற்குன்றத்தில் நேற்று (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசிய மகளிரணி உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “தாய்மார்களுக்கு ரூ.1000 கொடுத்தால், பிச்சை போட்டால் அவங்க திமுகவுக்கு வாக்களிச்சிருவாங்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழக அரசால் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று குஷ்பு தெரிவித்தற்கு திமுக நிர்வாகிகள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் குஷ்புவின் இந்த பேச்சை கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர்.
திமுக நிர்வாகிகளைத் தாண்டி இத்திட்டத்தால் பலன் பெறும் மகளிர் பலரும் குஷ்புக்கு கண்டனம் தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “1982-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கியபோது, அதை பிச்சை என்று முரசொலி மாறன் விமர்சித்தார். ஆனால், அதை யாரும் கண்டிக்கவில்லை.
அதேபோல ஓசியில் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்னபோதோ, மதுரை உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது கலைஞர் போட்ட பிச்சை என்று எ.வ.வேலு பேசியபோதோ யாரும் கண்டிக்கவில்லை.
தமிழகத்தில் போதைப்பொருளை நிறுத்துங்கள், டாஸ்மாக்கில் இருந்து வரும் வருமானத்தை குறைக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன்.
டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது உழைக்கும் பெண்களுக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட குடிகாரர்களால் அவர்கள் படும் வேதனையின் அளவு அதிகம்.
அவர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். உங்களது ரூ.1000 உதவித்தொகை அவர்களுக்கு தேவையில்லை.
இந்த உலகில் உள்ள மற்றவர்களை விட தங்களது அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, திமுகவுக்கு பணம் தேவை என்று நினைக்கிறேன்.
எனவே உங்கள் பொய்ப் பிரச்சாரத்தை தொடருங்கள். ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் எப்படி தோல்வியடைந்தீர்கள் என்பதை நிரூபிக்க ஒரே வழி அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடிக்கு உண்டு… விசாலாட்சிக்கு இல்லை… உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்!
பிளவுபடுத்தும் அரசியல்: சிஏஏ சட்டத்திற்கு எடப்பாடி, விஜய் எதிர்ப்பு!
பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!
கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்குத் தடை: எதற்காக?