மதுரை: ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி… நான்கு அதிகாரிகள் டிரான்ஸ்பர்!

அரசியல்

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடையில், 12 ஆயிரம் வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்குது உள்ளிட்ட 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 9) காலை மதுரை சென்றிருந்தார்.

அப்போது மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை, மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் சரிவர பணி செய்யாத நான்கு அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 9) முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வரும் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின் போது சில அலுவலர்களிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டாட்சியரும், ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒரு சுகாதார ஆய்வாளரும் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் இரண்டு விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்திற்கு எதிரான பாஜக வேட்பாளர் இவர்தான்!

கீழே விழுந்தேன்… சென்னை விமான நிலையத்தில் மனுஷ்யபுத்திரனுக்கு நடந்த கொடுமை!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *