மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்வதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமாக அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கடந்த மாதம் 7 ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பணிகளை விரைந்து முடித்து நான்கு மாதத்தில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வெளியான ஒப்பந்த புள்ளிகளை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
- க.சீனிவாசன்
நிதித்துறை சீர்திருத்தமும் நிலைகுலைந்த இந்தியாவும் : பகுதி 3