தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் இன்று (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசனைப் பற்றி ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஜி. சூர்யாவை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மதுரை சைபர் க்ரைம் போலீஸார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து காவல் ஆணையர் அலுவலகம் வெளியே பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவை சேர்ந்தவர்கள் பலரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவதூறு புகாரில் கைதான பாஜக மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா இன்று மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது விசாரித்த நீதிபதி ராம் சங்கரன், எஸ்.ஜி.சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எஸ்.ஜி.சூர்யா கைது… பழிவாங்கும் நடவடிக்கை- நாராயணன் திருப்பதி
தலைவர்களை படிக்க சொன்ன விஜய்: பாராட்டிய விசிக