”மதுரை பட்ஜெட்”: பட்ஜெட் புத்தகத்திற்கே தட்டுப்பாடு!

அரசியல்

2023-24 ஆம் நிதியாண்டிற்கான மதுரை மாநகர பட்ஜெட் புத்தகத்திற்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கான 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மேயர் இந்திராணி தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்திற்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

₹56.21 லட்சம் வருவாய் பற்றாக்குறை என பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரி வருவாய், மானியம், கடன் மூலம் ₹1751.25 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் நிர்வாக செலவினம், பராமரிப்பு, கடனை திரும்பச் செலுத்துதல் என ₹1751.82 கோடி செலவினம் எனவும் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டு மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போதும் நிதி பற்றாக்குறை மாமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவதில் குறைபாடு என மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தெரிந்தாலும் இந்த முறை பட்ஜெட் அச்சிடப்பட்ட புத்தகமே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டது.

இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் மீதான விவாதம், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் போது நடைபெறவுள்ளது.

madurai budget there is a shortage of budget book

இன்று மதுரை பட்ஜெட் தாக்கலின் போது ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் கருப்பு உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

மோனிஷா

திரையரங்கில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

பொம்மன், பெள்ளி பராமரித்த குட்டியானை உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *