மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டத் தொடங்குவீர்கள் என பாராளுமன்றத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் மக்களவையில் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இதில், இன்று (டிசம்பர் 13 ) பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், எப்போது கேள்வி எழுப்பினாலும் எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது பற்றியே பாஜக அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள்.
நேற்று பேசும்போதும் 2026ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என பாஜக அமைச்சர் கூறுகிறார்.
ஆனால் மருத்துவமனையை எப்போது திறப்பீர்கள் என்பது பற்றி அல்ல எங்கள் கேள்வி, எப்போது கட்டத் தொடங்குவீர்கள்? பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு திட்டத்தை தொடங்குங்கள் என எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் துவங்காத ஒரு திட்டத்தை முடிப்பது குறித்தும் திறப்பு விழா நடத்துவது குறித்தும் பேசி வருகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முல்லை பெரியாறு வழக்கு: அவசரமாய் விசாரிக்க மறுப்பு!
இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!