இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக அமைத்துள்ள தேர்தல் பணிமனைகளை அகற்ற வேண்டும் என்று மற்றொரு சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பணப்பட்டுவாடைவை தவிர்க்க தேர்தல் ஆணையம் தரப்பில் கண்காணிப்பு குழுக்களும் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புகார்கள் குறித்து முகாந்திரம் இருந்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 163 தேர்தல் பணிமனைகள் அமைக்கப்பட்டது.

107 பணிமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 42 தேர்தல் பணிமனைகளை சம்பந்தப்பட்ட கட்சியினர் அக்ற்றிவிட்டனர்.

மீதமுள்ள தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, எந்த தேதியில் யார் பணம் கொடுத்தார்கள் என்ற எந்த விவரங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை.

தேர்தல் நடைமுறைகள் துவங்கிவிட்டதால் இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும், மற்றொரு சுயேட்சை வேட்பாளர் ரவி தொடர்ந்து வழக்கு குறித்து பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

செல்வம்

டிஜிட்டல் திண்ணை: வந்தது ஜிஎஸ்டி ரெய்டு… உதயநிதி அதிர்ச்சி!

மாதவிடாய் விடுமுறை : கொள்கையை உருவாக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel