பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் தொடர்ந்த மனுவில், “2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்னும் முழுமையாக அந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள், மற்றும் புகாரளித்த சகோதாரரின் பெயர் வெளியிடப்பட்டதால் மற்ற பெண்கள் புகாரளிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வருக்கு புகார் மனு அளித்ததேன்.
அந்த புகார் மனு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்க வேண்டும்.” என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வில் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
செல்வம்
குடியரசு தின அணிவகுப்பு: பரிசுகள் வழங்கிய முதல்வர்
பார்டர் கவாஸ்கர் போட்டி: விராட் கோலி மீது கபில் தேவ் நம்பிக்கை!