எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Published On:

| By Kavi

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவை இணைத்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்திருந்தார். முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பதவி விலக வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு இன்று (அக்டோபர் 25) நீதிபதி டீகாராமன் முன் விசாரணைக்கு வந்த போது, ஆர்.எஸ்.பாரதி மனு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

மருமகளை கொடுமைப்படுத்தும் போது தெரியல… இப்போது, விஷம் குடித்த மாமியார்!

வெற்றிச் சாலை… விவேகச் சாலை… வியூகச் சாலை… விஜய்யின் கடித அரசியல்! 

ஹெல்த் டிப்ஸ்: முதுமையை இனிமையாக்கும் மேஜிக் இதோ…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel