கொடநாடு வழக்கு – எடப்பாடியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது?; நீதிபதி கேள்வி!

அரசியல்

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த வழக்கை  சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இவ்வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கோரி சநதோஷ் சாமி மற்றும் தீபு சதீசன் ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (நவம்பர் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் கூறியது” என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், கொடநாடு கொலை, கொள்ள வழக்கில் மேல் விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லை. இவ்வழக்கில் அவரை ஏன் எதிர் தரப்பு சாட்சியாக விசாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி.

எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை எதிர்த்தரப்பு சாட்சியாக விசாரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நீதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மோகன் லால் இயக்கும் ‘பரோஸ்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘அரியலூர் அரிமா’… அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0