அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவர் ராஜா படேரியா இன்று (டிசம்பர் 13) கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது
அந்த வீடியோ காட்சியில் அவர் பேசும்போது, “பிரதமர் மோடி, மதம், ஜாதி, மொழி அடிப்படையில் மக்களை பிரிப்பார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உயிர்கள் ஆபத்தில் உள்ளது.
அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பிரதமர் மோடியை கொல்ல தயாராக இருங்கள். கொல்லுங்கள் என்பது தேர்தலில் தோற்கடியுங்கள் என்பதாகும்.
மகாத்மா காந்தியின் அகிம்சை சித்தாந்தத்தை நான் பின்பற்றுகிறேன். சிறுபான்மையினரை பாதுகாக்க பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பது அவசியம்.” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சை கண்டித்த பாஜக தலைவர்கள் பலரும் படேரியாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் உண்மையான உணர்வை அம்பலப்படுத்துகிறது என்று மத்திய பிரேதச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்,ராஜா படேரியா மீது மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் காவல் நிலையத்தில் நேற்று மதியம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலை தாமோ மாவட்டம் ஹடா பகுதியில் உள்ள ராஜா படேரியா இல்லத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
செல்வம்
“நாட்டுக்கு உழைத்த மாமனிதர் உதயநிதி”: எடப்பாடி கிண்டல்!
டெஸ்ட் கிரிக்கெட்: ஆக்ரோஷமாக களமிறங்கும் இந்தியா