madhya pradesh bjp to form government again

மத்திய பிரதேசம்: மீண்டும் ஆட்சியை நோக்கி பாஜக

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) காலை தொடங்கிய நிலையில், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் வண்ணம் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலம் மத்திய பிரதேசம்தான். மொத்தம் 230 தொகுதிகளைப் பெற்றிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமே போட்டி நிலவியது.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளும் பாஜகவே முன்னிலை வகித்தது.

காலை 10  மணி நிலவரப்படி மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 149 தொகுதிகளில் ஆளும் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 79 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கமல்நாத் தான் போட்டியிட்ட சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்று தகவல்கள் வருகின்றன.
மத்திய பிரதேச பாஜக முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் தான் போட்டியிட்ட புத்னி சட்டமன்றத் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உருவானது மிக்ஜாம் புயல்… சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தெலங்கானா: இரு தொகுதிகளிலும் பின் தங்கும் கே.சி.ஆர்.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0