மாதவரம் சுதர்சனத்தின் ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு: துரைமுருகன் வெளியிட்ட ரகசியம்! 

அரசியல்

சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 20) கேள்வி நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்  மாதவரம் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் கலகலப்பை ஏற்படுத்தியது.

கேள்வி நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், “ சென்னை மாநகரத்தில் சமச்சீர் வளர்ச்சியை நோக்கி வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறார் நம்முடைய முதல்வர்.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே அடையாறு முதல் மாமல்லபுரம் வரைதான் போய்க் கொண்டிருக்கின்றன. வடசென்னையில் மருந்துக்கு கூட வருவதில்லை. ’

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மூன்று ஹை டெக் சிட்டிகள் அமைப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் சென்னை, கோவை, ஒசூரில் அமையும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

அதில்  சென்னை ஹை டெக் சிட்டியை மாதவரத்துக்கு கொண்டுவர அரசு ஆவன செய்யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ ஐடி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர். அதை அடுத்த உச்சத்துக்கு கொண்டு செல்கிறார் நமது முதல்வர்.

குறிப்பாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வரின் அறிவிப்பில் ஹை டெக் சிட்டிஸ் சென்னை, ஓசூர், கோவையில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்காக மூன்று இடங்களிலும் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவை. அதன் அடிப்படையில்  ஒசூரில் சுமார்  500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது.  கோவையில் 250 ஏக்கர் நிலம் பார்வையிடப்பட்டு வருகிறது.

சென்னையில் பல இடங்களில் நிலம்  தேடி வருகிறோம், மாதவரத்தில் மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கொஞ்சம் காலியாக   இருக்கிறது. அதை பரிசீலித்து வருகிறோம்.

அந்த இடம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக மாதவரத்தில் ஹை டெக் சிட்டி உருவாக்குவோம்” என்று கூறினார்.

அப்போது பேசிய  அவை முன்னவரும்  மூத்த அமைச்சருமான துரைமுருகன்,

“முக்கியமான கேள்வி…  மாதவரத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டியது முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கான இடம் இல்லை என்று அமைச்சர் சொல்கிறார்.

மாதவரம் சுதர்சனம்  என்கிட்ட சொல்லியிருக்கிறார். அவருக்கு ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு இருக்கிறது. அதில் 200 ஏக்கரை  கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”  என்று துரைமுருகன் சீரியசாகவே சொல்ல அவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலகலவென சிரித்தனர்.

இதன் பிறகும் மாதவரம் சுதர்சனம் ஆயிரம் ஏக்கர் மாந்தோப்புக்கு பதிலளிக்காமல், “மாதவரத்தில் அரசுத் துறைகளுக்கு சொந்தமான 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது” என்று கூறினார்.

இதனால் திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல சபாநாயகர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

வேந்தன்

இரட்டை இலை : கர்நாடக தேர்தல் அதிகாரிக்குச் சென்ற முக்கிய கடிதம்!

ஓபிஎஸ் இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்

Madhavaram Sudarsanam's Thousand Acre
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *