பிபிசி ஆவணப்படம்: மன்னிப்பு கேட்ட மதன் கெளரி

அரசியல்

பிபிசி ஆவணப்படம் குறித்து தான் வெளியிட்ட வீடியோவிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று யூடியுபர் மதன் கெளரி தெரிவித்துள்ளார்.

பிபிசி ஊடகம் India: The Modi Questions என்ற ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்றும் இந்தியாவை பிளவுபடுத்தக்கூடியவராக நரேந்திர மோடி இருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பிபிசி ஆவணப்படத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்தது.

பிபிசி ஆவணப்படம் குறித்து பிரபல யூடியுபர் மதன் கெளரி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும்போது, “இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம். 21 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பற்றி இப்போது ஏன் பேச வேண்டும். பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தான் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நடந்ததைப் பற்றி இங்கிலாந்து நாட்டு ஊடகம் ஏன் பேச வேண்டும்.” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது இந்த பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பிபிசி ஆவணப்படமானது குஜராத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. சிரியா, உக்ரைன் பிரச்சனைகள் குறித்து நீங்கள் பேசும் போது மோடி குறித்து பிபிசி பேசக்கூடாதா என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில் பிபிசி ஆவணப்படம் குறித்து தான் வெளியிட்ட வீடியோவிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மதன் கெளரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மோடி பிபிசி ஆவணப்படம் குறித்து நான் வெளியிட்ட வீடியோ என்னை பின்பற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் படித்தேன். தனிப்பட்ட முறையில் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிபிசி ஆவணப்படம் குறித்து வெளியிட்ட வீடியோ அகற்றப்படும். நான் எதிர்காலத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டி20 கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற செய்ய வேண்டியது இது தான்!

திருப்பதி : கோலாகலமாக நடந்த ரத சப்தமி விழா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
3
+1
1
+1
0

2 thoughts on “பிபிசி ஆவணப்படம்: மன்னிப்பு கேட்ட மதன் கெளரி

  1. மதன்கௌரியை விட சிறந்த எத்தனையோ பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்கும் பத்திரிக்கையாளர் இருக்கும் போது அவர்களை ஆதரிக்கலாம் அதை விட்டுவிட்டு நாம் ஏன் மதன்கௌரியை பின்தொடர வேண்டும் என்பது தான் என் கேள்வி

  2. மன்னிப்பு ஆங்கிலத்தில் தான் கேட்பாரா? ஆப்கான், சிரியா பற்றி நம்மவூர் மீடியா பேசலாம் ஆனால் BBC நம் நாட்டை பற்றி பேசக்கூடாது, ஏன். BBC மீது வழக்கு போட வேண்டியது தானே.. அதிக followers இருப்பதால் கண்டதை போடுவீங்களா. கர்ப்பிணி – குழந்தை கொன்று குவித்த கொடூரமான சம்பவத்தை நியாய படுத்த முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *