கோவையில் இருந்து தொடங்கும் கள ஆய்வு : ஸ்டாலின் அறிவிப்பு!

Published On:

| By christopher

M. K. Stalin has said that he will start the district-wise field survey from Coimbatore on Nov.

அரசு திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாகவே நான் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் பலரும், அவரவர் துறை சார்ந்த மற்றும் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்திருந்தனர்.

அதனை நானும் துணை முதலமைச்சரும் மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்தது. நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று பணியாற்றியதை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

எதிர்வரிசையிலே இருப்பவர்கள், திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் 19.50 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தேன். 16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களின் செயல்பாடு குறித்து நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன்.

கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இதுதான் ஃபைனல் கல்யாணம்!- 4வது திருமணம் செய்த பாலா உறுதி!

”இதய வாசலை திறந்து காத்திருப்பேன்” : தவெக தொண்டர்களுக்கு 3வது முறையாக விஜய் கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel