பொங்கல் காசு கொடுத்த மு.க.ஸ்டாலின்

அரசியல்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 15) தன்னை சந்திக்க வந்த திமுக தொண்டர்களுக்கு ரூ.100 பொங்கல் காசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கலை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழர் திருநாள் இது, பொங்கல் திருநாள் இது, உழவர் திருநாள் இது. உழவே தலையென வாழ்ந்த உழைப்பு சமூகத்தைச் சார்ந்தவர் நாம்.

மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டும் அல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த வேட்டை சமூகம் நம்முடையது.

இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு மற்ற உயிரினங்கள் இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழா தான் பொங்கல் பெருவிழா” என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏராளமான திமுக தொண்டர்கள் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பு குவிந்தனர். அப்போது தன்னை நேரில் சந்தித்தவர்களுக்கு தலா ரூ.100 பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு வாழ்க கோலம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லம் முன்பு தமிழ்நாடு வாழ்க என வண்ணக் கோலமிடப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளார் கனிமொழியின் சிஐடி காலனி இல்லம் முன்பாகவும் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் கோலம் போடப்பட்டுள்ளது.

பிரியா

சீறிப்பாயும் காளைகள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *