விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு நலமாக இருக்கிறார் என்றும், அவர் தோன்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார்.
அவரது அறிவிப்பு தமிழ்நாடு தாண்டி இலங்கைத் தமிழர் பகுதிகள் மற்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபாகரன் நலமோடு இருக்கிறார், அவரது குடும்பத்தினரிடம் பேசி உறுதிப்படுத்திய பிறகுதான் இதை தெரிவிக்கிறேன் என்று நெடுமாறன் சொல்லி 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும்,
இதுவரை அவரிடம் மாநில, மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த முயற்சிக்கின்றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தஞ்சாவூரின் புறநகரில் விளார் பகுதியில் அமைந்திருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றிலும் தமிழக அரசின் க்யூ ப்ராஞ்ச் போலீஸார் முகாமிட்டுள்ளனர்.
அதேநேரம் நேற்றில் இருந்து பழ. நெடுமாறன் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் இருக்கும் தனது அறையில்தான் இருக்கிறார்.
அவரது காரும் முள்ளி வாய்க்கால் முற்றம் வளாகத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. முள்ளி வாய்க்கால் முற்றத்தின் வாசல் பகுதி பின் பகுதி,
அருகே இருக்கும் டீக்கடைகளில் எல்லாம் க்யூ பிராஞ்ச் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பழ. நெடுமாறன் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் இருக்கும் நிலையில் அவரிடம் பிரபாகரன் பற்றி நேரடியாக சென்று விசாரணை நடத்த இருக்கிறார்கள் உளவுத் துறை அதிகாரிகள் என்று தகவல்கள் பரவியது.
ஆனால் பிப்ரவரி 14 பகல் வரையில் எந்த உளவுத்துறை அதிகாரியும் முள்ளி வாய்க்கால் முற்றத்துக்குள் செல்லவில்லை.
பிப்ரவரி 12 ஞாயிற்றுக் கிழமையே பழ. நெடுமாறன், பிரபாகரன் பற்றிய இந்த முக்கிய தகவல் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதித்திருக்கிறார்.
பிப்ரவரி 13 ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிடும்போது பழ.நெடுமாறனுடன் அமர்ந்திருந்த வழக்கறிஞர் அ.நல்லதுரை, பிப்ரவரி 12 ஆம் தேதி காலையே தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ உலகத் தமிழரின் நம்பிக்கை மரணத்தை வென்றது’ என்று பதிவிட்டிருந்தார்.
முதலில் ஞாயிறு மாலையே செய்தியாளர் சந்திப்பை நடத்தத் திட்டமிட்ட பழ. நெடுமாறன் பிறகு திங்கள் காலைக்கு அதை தள்ளி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பழ. நெடுமாறனிடம் விசாரணை நடத்த உளவுத்துறையினர் முயன்றால் முறைப்படி சம்மன் கொடுத்து அழைத்துதான் விசாரிக்க முடியும்.
எடுத்த எடுப்பில் முள்ளி வாய்க்கால் முற்றத்துக்குள் நுழைய முடியாது என்கிறார்கள் தஞ்சையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள்.
–வேந்தன்
உருட்டுக்கட்டையுடன் கல்லூரிக்குள் நுழைந்த வட இந்தியர்கள்: அலறிய மாணவிகள்!
பிபிசி ஆவணப்படம் தடை: பிபிசி நிறுவனத்திற்கும் தடையா?
காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நெடுமாறன் போன்ற அரைவேக்காடுகளை கைது செய்து விசாரிக்க வேண்டும்.