சீதை போல தீக்குளிக்கத் தயார்: காயத்ரி ரகுராம்  

அரசியல்

பாஜகவில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி  ரகுராம் இன்று (நவம்பர் 24) தொடர்ந்து ட்விட்டரில் தனது குமுறல்களை கொட்டி வருகிறார்.

இன்று காலை முதல் ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை இட்டு வரும் காயத்ரி ரகுராம்,   “நான் பேட்டியளித்தாக இன்று செய்தித் தாள்களில் வந்துள்ளவற்றுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.

நான் சொன்னதாக வரும்  போட்டோ கார்டுகளில் பல போலியாக பரப்பப்பட்டு வருகின்றன. நான் கொடுக்கும் வீடியோ பேட்டிகளைத் தவிர வேறு எதையும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கும் காயத்ரி ரகுராம்,

 “பாஜகவில் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் குறிவைக்கப்பட்டேன்,  முதலில் நான் திமுக, விடுதலைச் சிறுத்தை கட்சியினரால் ட்ரோல் செய்யப்பட்டேன்.

இப்போது வலது சாரிகளாலும் நான் ட்ரோல் செய்யப்படுகிறேன். நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை.

கட்சியின் பொறுப்புகளில்  இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எனது பணியை களத்தில் ஒரு தொண்டராக  செய்து, மக்களைச் சென்றடைவேன்.

அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பணி செய்ய அனுமதியுங்கள்.

நமது தலைசிறந்த தலைவர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தகைய இடைவெளிகளை சந்தித்துள்ளனர். காலம் என் காயங்களை ஆற்றும்.

என்னை வெளியேற்ற விரும்பியவர்கள், நீங்கள் விரும்பியதை அடைந்துவிட்டீர்கள். ஆம் நான் நீண்ட காலமாக சுய அழிவு நிலையில் இருந்தேன்.

என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்புபியவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்… தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில்  சீதையின் அக்னி பரிட்சை போன்று பிஜேபி மீதான விசுவாசத்தை நிரூபிப்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று பொங்கித் தீர்த்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல், ஷோகாஸ் நோட்டீஸ் கூட கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று காயத்ரி ரகுராம் சொல்லி வந்த நிலையில்தான், ’என்னை நிரூபிக்கத் தயார்’ என்று மீண்டும் கூறியுள்ளார்.

வேந்தன்

தேர்தல் ஆணையர் நியமனத்தில் அவசரம் ஏன்? – உச்சநீதிமன்றம்

முத்துசாமி தீட்சிதர் பெற்ற வீணை: மகிழ்ச்சியில் மத்திய அமைச்சர்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *