இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முறையே 71.16 சதவிகித, மற்றும் 68.15 வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்தியப் பிரதேசம்
230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்துக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
230 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 71.16 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமாக 75.05% சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இந்த தேர்தலில் 3.86 சதவிகிதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் ஏற்கனவே நவம்பர் 7ஆம் தேதி 20 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று 90 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சலைட் பாதிப்புள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மற்ற பகுதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்தல் நடைபெற்றது.
இதில் கரியாபண்ட் மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஜவான் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு பரபரப்புக்கு மத்தியில் நடந்த சத்தீஸ்கரின் இரண்டாம் கட்ட தேர்தலில் 68.15% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
2018ல் சத்தீஸ்கரில் நடந்த தேர்தலில் மொத்தமாக 75.3% வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உலக கோப்பை நடுவர்கள் அறிவிப்பு: ரசிகர்கள் ஷாக்!
டிஜிட்டல் திண்ணை: சிறப்பு சட்டமன்றம்-ஸ்டாலின் வைக்கும் செக்- ஆளுநருக்குப் பின்னால் அந்த 4 பேர்!