நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

politics அரசியல் டிரெண்டிங்

முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பி.ஜே.பியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருக்கு எதிராகவும் பி.ஜே.பி.க்கு எதிராகவும் கண்டனங்கள் குவிந்தன. இதனால், உலக நாடுகளின் எதிர்ப்பையும் இந்தியா எதிர்கொண்டது. இதையடுத்து, நுபுர் சர்மாவை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியது பாஜக.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது பல மாநிலங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், ‘நுபுர் சர்மா இஸ்லாமிய மனங்களைப் புண்படுத்திவிட்டார். அவர், ஒட்டுமொத்த நாட்டிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கண்ணையா லால் என்ற தையல் தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், அவதூறு கருத்து தொடர்பாக நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். முன்னதாக கொல்கத்தா காவல்துறை சார்பில் அவர்மீது இரண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
நர்கெல்டங்கா காவல் நிலையத்தால் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, ஜூன் 20ஆம் தேதி ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அதுபோல் மற்றொரு காவல் நிலையமான ஆம்ஹெர்ஸ்ட்த்திலிருந்து ஜூன் 25ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி இந்த இரண்டு சம்மன்களிலும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கொல்கத்தா காவல்துறையால் லுக்அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பயணம் செல்வதை அல்லது வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறை உள்ளிட்ட சில துறைகளால் விடுக்கப்படும் ஒரு சுற்றறிக்கையே, லுக் அவுட் நோட்டீஸ்.
இது, நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்த நாளிலிருந்து ஒரு வருடத்துக்குச் செல்லுபடியாகக் கூடியது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகை ரியா சக்ரபோர்த்தி ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.