நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று (மார்ச் 16) மதியம் 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. loksabha Election Date
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பதவிக்காலம், வரும் ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
அதனைத்தொடர்ந்து 18வது புதிய நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. ஆனால் பெரிதும் எதிர்ப்பார்ப்பட்ட தேர்தல் தேதி அறிவிப்பானது, இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா காரணமாக தள்ளிப்போனது.
மாலை 3 மணிக்கு அறிவிப்பு!
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார், புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் மூவரும் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
அப்போது, 18வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட உள்ளது.
இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும்.
இந்த அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
4 மாநில சட்டமன்ற தேர்தல்!
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலும் அதே 7 கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலமும் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையை உள்ளது.
எனவே இந்த 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அட்டவணையும் இன்று வெளியிடப்படும்.
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல் இருக்கும்?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. loksabha Election Date
ஆனால் தற்போது நடைபெற உள்ள தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல் மற்றும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடியின் பயணம் போன்றவை இதை உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னைவாசிகளே அலர்ட் : ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்!
மாணவர்கள் வாக்காளர் அட்டையை கேட்ட ஆளுநர்: கடும் எதிர்ப்பால் உத்தரவு ரத்து!