allaiance is under admk leadership

அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள்: சஸ்பென்ஸ் வைக்கும் ஜெயக்குமார்

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரக் கூடும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர் மா.பொ.சிவஞானத்தின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 26) அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணியா என்ற கேள்விக்கு,

“எத்தனை முறை சொல்வது. பல முறை சொல்லியுள்ளேன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று. எங்களுடைய கட்சி நலன் பாதிக்காத வகையில் தான் சீட் ஒதுக்கீடு செய்ய முடியும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றது. தேர்தல் நெருங்கும்போது யாருக்கு எத்தனை சீட் கொடுப்பது, எந்தெந்த தொகுதிகளில் கொடுப்பது என்று கமிட்டி அமைத்து ஆலோசிக்கப்படும்.

அந்த கமிட்டியில் எங்களது தோழமை கட்சிகள் அனைத்தும் இருக்கும். அவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை அதிமுக தான் முடிவெடுக்கும்.

தேர்தல் நெருங்க நெருங்கப் பல கட்சிகள் எங்களுடன் வர உள்ளன. அது சஸ்பென்ஸ் என்பதால் அதையெல்லாம் சொல்ல முடியாது” என்றார்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து கேட்டதற்கு, “எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கை தூக்கியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் மூட்டையில் நெல்லிக்காயை கொட்டியது போலத்தான்.

கட்டு அவிழ்ந்தால் சிதறிவிடுவார்கள். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் விலகி கொள்கிறோம் என்று ஆம் ஆத்மி குரல் கொடுத்துள்ளார்கள்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் சிபிஎம்-க்கும் பிரச்சனை, கேரளாவில் சிபிஎம்-க்கும் காங்கிரஸுக்கு பிரச்சனை எப்படி ஒத்துப்போகும்? தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் குறைந்து விடும். எது எப்படியிருந்தாலும் சரி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்கள் (அதிமுக) தலைமையில் கூட்டணி” என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மோனிஷா

கடிதம் எங்கே? – செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!

கோவில் திருவிழா கலவரம்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *