2024 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் திருமாவளவன், தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வந்தார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
திருமாவளவன் 5,05,084 வாக்குகளும், சந்திரகாசன் 4,01,530 வாக்குகள், பாஜக வேட்பாளர் கார்த்திகாயினி 1,68,493 வாக்குகள், நாதக வேட்பாளர் ஜான்சிராணி 65,589 வாக்குகள் பெற்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், 3,219 வாக்கு வித்தியாசத்தில் சந்திரகாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சேலம் : எடப்பாடியார் கோட்டையை தகர்த்த திமுக!
கள்ளக்குறிச்சி : திமுக வெற்றி… பாமகவை பின்னுக்கு தள்ளிய நாதக!