2024 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளிலும் விசிக பானை சின்னத்தில் போட்டியிட்டது.
விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் களமிறங்கினார். இவர் 4,77,033 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாக்கியராஜை தோற்கடித்தார்.
பாக்கியராஜ் 4,06,330 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 70,703 ஆகும்.
மூன்றாவது இடத்தில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் 1,81,882 வாக்குகளும், நான்காவது இடத்தில் நாதக வேட்பாளர் களஞ்சியம் 57,242 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருவண்ணாமலை: சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!