நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் வெற்றி பெற்றார்.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் தமிழ்மணி, பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி ஆகியோர் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டனர்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்திலேயே இரு கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.
இறுதியில் 4,62,036 வாக்குகளை பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்ட மாதேஸ்வரன் வெற்றி பெற்றார்.
29,112 என குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை தோற்கடித்தார் மாதேஸ்வரன்.
இந்த தொகுதியில் 1,04,690 வாக்குகளுடன் பாஜக மூன்றாவது இடத்திலும், 95,577 வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடத்திலும் உள்ளன.
2019 தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து திமுக சார்பில் ஏ.கே.பி.சின்னராஜ் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கலியப்பனை 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிதம்பரம்: ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திருமா வெற்றி!
சேலம் : எடப்பாடியார் கோட்டையை தகர்த்த திமுக!