தூத்துக்குடி தொகுதியிலிருந்து மீண்டும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் களம் கண்டனர்.
இதில் முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்
கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை தோற்கடித்தார்.
1,22,380 வாக்குகளுடன் தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன் மூன்றாவது இடத்திலும் 1,20,300 வாக்குகள் பெற்று நாதக ரௌனா ரூத் ஜெனி நான்காவது இடத்திலும் உள்ளனர்.
2019 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்சியை தன்வசமாக்கிய துரை வைகோ
தென் சென்னை : தமிழிசையை தோற்கடித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்