ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் தரணி வேந்தன் வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், பாமக சார்பில் கணேஷ்குமார், நாதக சார்பில் பாக்யலட்சுமி உள்ளிட்டோர் ஆரணி தொகுதியில் போட்டியிட்டனர்.
இவர்களில் தரணி வேந்தன் 5,00,099 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2,08,766 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதுபோன்று பாமக கணேஷ் குமார் 2,36,571 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், 66,740 வாக்குகள் பெற்று நாம் தமிழர் பாக்கிய லட்சுமி நான்காவது இடத்தில் உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக செஞ்சி ஏழுமலையை 2,30,806 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தர்மபுரி: கடைசி வரை டஃப் கொடுத்து வெற்றிகனியை பறித்த திமுக!
திருவண்ணாமலை: சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!