2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் அருண் நேரு, அதிமுக சார்பில் சந்திரமோகன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், நாதக சார்பில் தேன்மொழி ஆகியோர் களமிறங்கினர்.
வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதல் முன்னிலை வகித்துவந்த அருண் நேரு, சந்திரகாசனை விட 3,89,107 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அருண் நேரு 6,03,209 வாக்குகள் பெற்றிருந்தார்.
2,14,102 வாக்குகளுடன் சந்திரகாசன் இரண்டாம் இடத்திலும், 1,61,866 வாக்குகளுடன் பாரிவேந்தர் மூன்றாம் இடத்திலும், 1,13,092 வாக்குகள் பெற்று தேன்மொழி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடி : 27 பேரின் டெபாசிட்டை இழக்கச் செய்து கனிமொழி வெற்றி!
திருச்சியை தன்வசமாக்கிய துரை வைகோ