நீலகிரி: அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி!

அரசியல்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா, பாஜக வேட்பாளர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

70.93 சதவீத வாக்குகள் இந்த தொகுதியில் பதிவானது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 4)  நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆ.ராசா முன்னிலை வகித்து வந்தார்.

24 சுற்றுக்களில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆ.ராசா 4,73,212 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் எல்.முருகனை 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எல்.முருகன் 2,32,627 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்தார்.

அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 2,20,230 , நாதக வேட்பாளர் ஜெயக்குமார் 58,821 வாக்குகளுடன் மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.

2019ல் ஆ.ராசா 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை தோற்கடித்தார். கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்.முருகனை தோற்கடித்துள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெரம்பலூர்: அருண் நேரு அமோக வெற்றி!

தூத்துக்குடி : 27 பேரின் டெபாசிட்டை இழக்கச் செய்து கனிமொழி வெற்றி!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *