நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை இன்று (மார்ச் 13) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.

கூட்டத்தொடர் துவங்கியதும் மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “லண்டனில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் மைக்குகள் அமைதிப்படுத்தப்படுவதாக கூறியிருப்பது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் மக்களவை மாநிலங்களவை இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
”யானைக்குட்டியை பிடித்து கொண்டு அழுதிருக்கிறேன்” நெகிழும் பெள்ளி