பிரதமர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே இன்று (மார்ச் 2) டெல்லியில் வெளியிட்டார்.
முதல்கட்ட பட்டியலில் 195 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்கள் விவரம்
உத்தரப் பிரதேசம் 51, மேற்கு வங்கம் 20, மத்தியப் பிரதேசம் 24, குஜராத் 15, ராஜஸ்தான் 15, கேரளா 12, தெலங்கானா 9, அசாம் 11, ஜார்க்கண்ட் 11, சத்தீஸ்கர் 11, டெல்லி 5, ஜம்மு காஷ்மீர் 2, உத்தரகாண்ட் 3, அருணாசல பிரதேசம் 2, கோவா 1, திரிபுரா 1, அந்தமான் நிக்கோபார் 1, டாம் அண்ட் டையூவில் 1 என 195 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா- ராஜஸ்தான், கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.
29 फरवरी, 2024 को प्रधानमंत्री श्री @narendramodi की गरिमामयी उपस्थिति और श्री @JPNadda की अध्यक्षता में आयोजित केंद्रीय चुनाव समिति की बैठक में आगामी लोकसभा चुनाव हेतु 195 लोकसभा सीटों के लिए बीजेपी उम्मीदवार के नामों पर मंजूरी दी गई। (1/4) pic.twitter.com/Wv8yVYnegK
— BJP (@BJP4India) March 2, 2024
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள்…
1.மோடி -உத்தரப் பிரதேசம், வாரணாசி
2.அமித்ஷா – குஜராத், காந்திநகர்
3.ராஜ்நாத் சிங் – உத்தரப் பிரதேசம், லக்னோ
4.ஜோதிராதித்ய சிந்தியா – மத்தியப் பிரதேசம் குணா
5.மன்சுக் மாண்டவியா- குஜராத், போர்பந்தர்
6.ஜிதேந்திர சிங்- ஜம்மு காஷ்மீர், உதம்பூர்
7.அர்ஜுன் ராம் மேக்வால் – ராஜஸ்தான், பிகானர்
8.பூபேந்திர யாதவ் -ராஜஸ்தான், ஆல்வர்
9.கஜேந்திர சிங் ஷெகேவாத் – ராஜஸ்தான், ஜோத்பூர்
10.சர்பானந்த சோனாவால்-அசாம். திப்ருகர்
11.ஸ்மிருதி இராணி – உத்தரப் பிரதேசம், அமேதி
12.பர்ஷோத்தம் ரூபாலா – குஜராத், ராஜ்கோட்
13.அருணாச்சல பிரதேசம் மேற்கு- கிரண் ரிஜுஜு
14.கிஷான் ரெட்டி -தெலுங்கானா, செகந்திராபாத்
29 फरवरी, 2024 को प्रधानमंत्री श्री @narendramodi की गरिमामयी उपस्थिति और श्री @JPNadda की अध्यक्षता में आयोजित केंद्रीय चुनाव समिति की बैठक में आगामी लोकसभा चुनाव हेतु 195 लोकसभा सीटों के लिए बीजेपी उम्मीदवार के नामों पर मंजूरी दी गई। (2/4) pic.twitter.com/BpCGQIOXNo
— BJP (@BJP4India) March 2, 2024
இணையமைச்சர்கள்
15.ஸ்ரீபாத் நாயக் – கோவா வடக்கு
16.ஃபக்கன் சிங் குலஸ்தே- மத்தியப் பிரதேசம், மண்டலா
17.சத்யபால் சிங் பாகேல் – உத்தரப் பிரதேசம், ஆக்ரா
18.ராஜீவ் சந்திரசேகர் – கேரளா, திருவனந்தபுரம்
19.தேவ்சிங் சவுகான் – குஜராத், கெடா
20.நிசித் பிரமானிக்-மேற்கு வங்காளம், கூச் பெஹார்
21.மகேஷ் சர்மா-உத்தரப் பிரதேசம், கவுதம் புத்த நகர்
என 34 அமைச்சர்கள் மற்றும் இணைஅமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
29 फरवरी, 2024 को प्रधानमंत्री श्री @narendramodi की गरिमामयी उपस्थिति और श्री @JPNadda की अध्यक्षता में आयोजित केंद्रीय चुनाव समिति की बैठक में आगामी लोकसभा चुनाव हेतु 195 लोकसभा सीटों के लिए बीजेपी उम्मीदवार के नामों पर मंजूरी दी गई। (3/4) pic.twitter.com/lEFwcG2PNg
— BJP (@BJP4India) March 2, 2024
முன்னாள் முதல்வர்கள்
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிடவுள்ளார். திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் குமார் திரிபுரா மேற்கில் போட்டியிடுகிறார்.
29 फरवरी, 2024 को प्रधानमंत्री श्री @narendramodi की गरिमामयी उपस्थिति और श्री @JPNadda की अध्यक्षता में आयोजित केंद्रीय चुनाव समिति की बैठक में आगामी लोकसभा चुनाव हेतु 195 लोकसभा सीटों के लिए बीजेपी उम्मीदवार के नामों पर मंजूरी दी गई। (4/4) pic.twitter.com/EcvaQvcXnz
— BJP (@BJP4India) March 2, 2024
நடிகர்கள்- அரசியல்வாதிகள்
ஹேம மாலினி – உத்தரப் பிரதேசம் மதுரா
சுரேஷ் கோபி – கேரளா, திரிசூர்
ஹிந்தி நடிகர் ரவி கிஷன் – உத்தரப் பிரதேசம், கோரக்பூர்,
முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மகள் பாசுரி ஸ்வராஜுவுக்கு புது டெல்லியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சின்மயி வந்தால் ‘காம்பவுண்டுக்குள்ளேயே’ விட மாட்டோம்: ராதாரவி
மோடியோடு அரசு நிகழ்வு: மீண்டும் தவிர்க்கும் ஸ்டாலின்