தொடங்கிய வாக்குப்பதிவு : வாக்காளர்களிடம் மோடி வேண்டுகோள்!

சாதனை அளவை எட்டும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் காலை முதலே சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

வேலைவாய்ப்பு : என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts