காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் இ.ராஜசேகர், பாமக சார்பில் வி.ஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகளை பெற்றார். மொத்தம் 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
பாமக வேட்பாளர் வி.ஜோதி 1,64,931 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 1,10,272 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.
2019ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் மரகதத்தை 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.செல்வம் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருவள்ளூர்: வெற்றி வாகை சூடிய சசிகாந்த் செந்தில்
வட சென்னை : ராயபுரம் மனோவை தோற்கடித்த கலாநிதி வீராசாமி