ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் பிரேம்குமார் தமாக சார்பில் வேணுகோபால், நாம் தமிழர் சார்பில் ரவிச்சந்திரன் ஆகியோர் களம் கண்டனர்.
இந்த தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில் டி.ஆர்.பாலு 7,58,611 வாக்குகள் பெற்று 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை தோற்கடித்தார்.
பிரேம்குமார் 2,71,582 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும், வேணுகோபால் 2,10,110 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ரவிச்சந்திரன் 1,40,233 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் டி.ஆர்.பாலு 4,84,732 வாக்கு வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வட சென்னை : ராயபுரம் மனோவை தோற்கடித்த கலாநிதி வீராசாமி
மத்திய சென்னை – வெற்றியை தக்கவைத்த தயாநிதி மாறன்